சாமை அரிசி வெண் பொங்கல்!
தேவையான பொருட்கள்:சாமை அரிசி - 1 கப்பாசி பருப்பு - 50 கிராம்மிளகு, சீரகம், துருவிய இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு, நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கடாயில், மிதமான தீயில், பாசி பருப்பை பொன் நிறமாக வறுக்கவும். பின் சாமை அரிசியை நன்றாக கழுவி, குக்கரில், நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, சாமை அரிசி, பாசி பருப்பு, உப்பு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக வேக வைத்து இறக்கவும். பின், மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலையை நெய்யில் வறுத்து, வேக வைத்ததுடன் சேர்த்து நன்றாக கிளறவும். சுவை மிக்க, 'சாமை அரிசி வெண் பொங்கல்!' தயார். சாம்பார், சட்னியுடன் பரிமாறவும். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- இ.வெற்றிச்செல்வி, திருப்பூர்.தொடர்புக்கு: 96594 39789