கடல் நீருக்கு நிறமில்லை!
கடல் நீர் தெளிவானது. ஆனால், கடல் நீர் நீல நிறம் போல் தெரியும். மேகத்தின் நிறத்திற்குத்தக்க அதன் பிரதி பலிப்பு கடலின் மேல் பரப்பில் தெரியும். இதற்குச் சூரிய ஒளிக்கதிர்கள் தான் காரணம். ஆழமான கடலின் ஆழம் நீல நிறம் போலவோ அல்லது இருண்ட ஊதா நிறம் போலவோ காட்சியளிப்பதற்கு சூரிய ஒளிக்கதிர்களின் மாற்றமே காரணம். சூரிய ஒளி மறைந்ததும், நிறமெல்லாம் மாயமாக மறைந்து விடும்!