உள்ளூர் செய்திகள்

சிம்பிள் சயின்ஸ்!

குட்டீஸ் நீங்க பீச்சுக்கு போகப் போறீங்களா? ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கிறீர்களா? அதாவது, இரண்டு கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் சாதாரண தண்ணீரை நிரப்புங்கள். மற்றொரு கிளாலில் கடல் தண்ணீரை நிரப்புங்கள். முதல் கிளாலில் முட்டையைப் போடுங்கள். முட்டை மூழ்கி விடும். இரண்டாவது கிளாஸில் முட்டையை போடுங்கள். முட்டை மிதக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?சாதாரண தண்ணீரை விட கடல் தண்ணீரின் அடர்த்தி அதிகம். ஆர்க்கிமிடிஸ் விதிப்படி ஒரு பொருள் நீரில் மிதக்க வேண்டுமானால், அந்த பொருளின் எடையின் அளவு தண்ணீர் வெளியேற வேண்டும். கடல் தண்ணீரின் அடர்த்தி அதிகம் என்பதால் முட்டையின் அளவு தண்ணீர் வெளியேறி முட்டை மிதக்கிறது. இந்த சோதனையை நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம். செயற்கை கடல் நீர் தயாரிக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் மூன்று, நான்கு மடங்கு உப்பு போட்டு கரைக்கவும். கடல் நீர் தயார்... இப்ப சோதனையை ஆரம்பித்து விட வேண்டியதுதானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !