உள்ளூர் செய்திகள்

அகழ் எலி!

நேக்கட் மோல் என்பது ஒரு வகை எலி. தமிழில் அகழ் எலி என அழைக்கப்படுகிறது. இதற்கு கண்கள் இல்லை. நுகர்வுத் திறனை பயன்படுத்தி பூமிக்கு அடியில் வாழும். வடகிழக்கு ஆப்ரிக்கா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றன. கால்பந்து ஆடுவதற்கான களத்தின் நீளத்திற்கு, இதன் பொந்து, பூமிக்கடியில் சுரங்கம் போல, பல அறைகளுடன் இருக்கும். இந்த எலி, 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.பற்களால், வசிக்க தேவையான பொந்தை மண்ணுக்கு அடியில் தோண்டும். இப்படி செய்வதால் மண்ணில் பல்லுயிர் பெருக்கம் மேம்பட்டு, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுகிறது. குறைந்த அளவு ஆக்சிஜன் இருக்கும் சூழலிலும் இந்த எலியால் வாழ முடியும். - மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !