உள்ளூர் செய்திகள்

அந்தநாள் ஞாபகம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்தேன். கல்வி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமங்களை சேர்ந்தோரே படித்து வந்தோம். இதை கவனத்தில் கொண்ட கணித ஆசிரியர் மாரிமுத்து, எளிய நடைமுறையில் பாடங்களை கற்பிப்பார். கணித வாய்ப்பாடுகளை தலைகீழாகவும் சொல்லும் வகையில் மனதில் பதிய வைத்தார். அவரது அளப்பரிய ஈடுபாடும், கற்பிக்கும் முறையும் நல்ல வழிகாட்டுதலாக இருந்தது. வீட்டில் இருந்து எடுத்த வரும் மதிய உணவில் எங்களுக்கும் உண்ண தந்தார். படிப்பில் பின்தங்கியோருக்கு இலவசமாக தனிப்பயற்சி வகுப்புகள் நடத்தினார். மரக்கன்றுகள் நட வைத்து சேவை உணர்வை வளர்த்தார். இப்போது என் வயது, 43; தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிகிறேன். வகுப்பில் ஒன்றாக பயின்றோர் 25 ஆண்டுகளுக்கு பின், அதே பள்ளியில் மே 25, 2025ல் கூடினோம். கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறி பரிசுகள் வழங்கி கவுரவித்தோம். தற்போது, 80 வயதாகும் கணித ஆசிரியர் மாரிமுத்துவும் அதில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது மனதுக்கு நிறைவை தந்தது. -- இ.பரசுராமன், சென்னை. தொடர்புக்கு: 99627 37165


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !