உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

என் பெயர் வினய். நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். சிறுவர்மலர் எனக்கு பிடித்த இதழ். நான் சிறுவர் மலரின் பெரிய ரசிகன். அதில் இடம் பெற்றிருக்கும் தொடர்கதைகள், சிறுகதைகள், படக்கதைகள் மற்றும் மொக்க ஜோக்ஸ் ஆகியவையை நான் மிகவும் விரும்பி படிப்பேன். அதில் வரும் வரைபடங்கள் மற்றும் ஓவியங்களுள் எனது ஓவியம் இடம்பெற வேண்டும் என்பது என் கனவாகும். மற்றும் சிறுவர் மலர் நடத்தும் கையெழுத்து போட்டியில் பரிசு பெற வேண்டும் என்பது எனது இலக்கு.சிறுவர் மலர் தினமும் செய்தித்தாளுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். சிறுவர் மலர் இதழ் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன். இப்படிக்குஜெ.வினய் 8ம் வகுப்பு, டி.இ.ஏ., பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !