மின்சார விலாங்கு மீன்!
மின்சார விலாங்கு மீன் உடல் 3 அடி நீளமுள்ளது. இதன் உடல் முழுதும், மின்னுாட்டம் கொண்ட அயனிகள் அல்லது எலக்ட்ரோலைட்ஸ் இருக்கும். இவை தான் மின்சார விலாங்கு மீன்களுக்கு, ‘ஷாக்’ ஏற்படுத்தும் சக்தியை கொடுக்கிறது. காரில் உள்ள பேட்டரி செல் போல, இதன் உடல் முழுதும் ஆயிரக்கணக்கான சிறிய செல்கள் அடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு உணவாகும் உயிரினமோ, எதிரியோ வந்தால், இவை செயல்பட்டு, மின்சார அதிர்ச்சியை கொடுக்கும். உணவை பிடிக்கவோ, எதிரியிடம் இருந்து தப்பவோ இது உதவும்.