உள்ளூர் செய்திகள்

காக்கையும், குயிலும்!

காட்டில், நட்புடன் பழகி வந்தன காக்கையும், குயிலும். அன்று, 'நண்பா... ஏன் சோகமாய் இருக்கிறாய்...' என்று கேட்டது குயில்.'நிறம் தான் எனக்கு விரோதி. என் இனப் பறவையான காக்கையை வீட்டில் வளர்க்கின்றனரா... கிளி, மைனா தானே வளர்க்கின்றனர்...'வெறுப்புடன் கூறியது காக்கை.'எங்கள் இனமும், கருமை நிறம் தான். அதற்காக, நாங்கள் ஒருபோதும் வருந்துவது இல்லையே...''நிறம் கருமை என்றாலும் குரல் இனிமையாய் தானே இருக்கிறது. குயிலை விரும்பாதோர் இல்லை. எங்கள் குரலை யாரும் கேட்க விரும்புவதில்லை...''ஒரு விசேஷ குணம், உங்கள் இனத்துக்கு இருக்கிறதே...''அப்படி என்ன...''கூடி பகிர்ந்து உண்கிறீர். அது சிறப்பு இல்லையா...''எனக்கு அதில் நம்பிக்கையில்லை. உணவை பார்த்த காக்கை, முதலில் வயிறு முட்ட உண்ணும். பின் அழைக்கும்...''சரி... முக்கியமான விஷயம் ஒன்றை சொல்கிறேன். மகிழ்ச்சி அடைவாய்...''என்ன செய்தி...''விசேஷ நாட்களில் காக்கையை அழைத்து, உணவு அளித்த பின் தானே உண்ண துவங்குகின்றனர் மக்கள். இது பெருமை தானே...'குயில் கூறியதை கேட்டதும் திருப்தி அடைந்தது காக்கை. நம்பிக்கையுடன் இரை தேட பறந்து சென்றது.பட்டூஸ்... நிறம், குரலால் யாருக்கும் பெருமை கிடையாது. நற்செயல்கள் ஆற்றினால் தான் சிறப்பு கிடைக்கும்!- ஆர்.தனபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !