கொள்ளு வடை!
தேவையான பொருட்கள்:கொள்ளு - 250 கிராம் பச்சை மிளகாய் - 2கேரட் - 50 கிராம் முள்ளங்கி - 50 கிராம் வெங்காயம் - 3 இஞ்சி, பூண்டு - சிறிதளவுகறிவேப்பிலை, உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கொள்ளு தானியத்தை, நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துண்டாக்கிய இஞ்சி, பூண்டு, துருவிய கேரட், முள்ளங்கி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசையவும். அதை சிறு வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவை மிக்க, 'கொள்ளு வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்புவர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.- எம்.பாக்கியலட்சுமி, சென்னை.