முருங்கைக்கீரை கேழ்வரகு அடை!
தேவையான பொருட்கள்:முருங்கை கீரை - 1 கப்கேழ்வரகு மாவு - 1 கப்பெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கேழ்வரகு மாவுடன் சுத்தம் செய்த முருங்கை கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போடவும். இதில் தண்ணீர் கலந்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அடையாக்கவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி அடையை வேக வைக்கவும்.கால்ஷியம், இரும்பு, நார் சத்துகள் நிறைந்த, 'முருங்கைக்கீரை கேழ்வரகு அடை!' தயார். தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- கா.லட்சுமி, சென்னை.