சேப்பங்கிழங்கு தோல் துவையல்!
தேவையான பொருட்கள்:சேப்பங்கிழங்கு தோல் - 100 கிராம்காய்ந்த மிளகாய் - 4உளுந்தம் பருப்பு, புளி, கடுகு, உப்பு - சிறிதளவுகறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வேக வைத்த சேப்பங்கிழங்கை உரித்து தோல் மட்டும் சேகரிக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் அதை போட்டு வதக்கவும். பின், உளுந்து, காய்ந்த மிளகாய், புளியை வதக்கி சேர்த்து அரைக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.சத்து மிக்க, 'சேப்பங்கிழங்கு தோல் துவையல்!' தயார். சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவை தரும்!- எஸ்.கவிதா, காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 99526 24008