உள்ளூர் செய்திகள்

தானிய தோசை!

தேவையான பொருட்கள்:ராகி, கம்பு, கோதுமை, வரகு, கறுப்பு உளுந்து -- தலா 100 கிராம் கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை -- தலா 50 கிராம் வெந்தயம், எண்ணெய், உப்பு, தண்ணீர் -- தேவையான அளவு.செய்முறை: க ருப்பு கொண்டைக்கடலை, ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். பின் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். உப்பு சேர்த்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி தோசையாக்கவும். சுவை மிக்க, 'தானிய தோசை!' தயார். சட்னியுடன் சாப்பிடலாம். காலை உணவுக்கு ஏற்றது. - மு.நாகூர், ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !