தேங்காய் மரவள்ளிக்கிழங்கு சட்னி!
தேவையான பொருட்கள்:மரவள்ளிக்கிழங்கு - 150 கிராம்துருவிய தேங்காய் - 100 கிராம்பச்சை மிளகாய் - 3பெருங்காயத்துாள், உளுந்தம் பருப்பு, உடைத்த கடலை, முந்திரிப்பருப்பு - சிறிதளவுபுளி, உப்பு, கடுகு, கறிவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக்கவும். அதில், தேங்காய், பச்சை மிளகாய், பெருங்காயத்துாள், உடைத்த கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு, புளி மற்றும் தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில், எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதில் கலக்கவும். சுவை மிக்க, 'தேங்காய் மரவள்ளிக்கிழங்கு சட்னி!' தயார். இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட ஏற்றது; அனைத்து வயதினரும் விரும்புவர்.- மு.நாவம்மா, விழுப்புரம்.