உள்ளூர் செய்திகள்

வாழைப்பூ துவையல்

தேவையான பொருட்கள்: வாழைப்பூ - 1 மிளகாய் - 8 உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி பூண்டு, இஞ்சி, புளி - சிறிதளவு எண்ணெய், தண்ணீர், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, நறுக்கிய மிளகாய், புளி, பூண்டு, துண்டாக்கிய இஞ்சி, தேங்காய் துருவல், உப்பு மற்றும் வாழைப்பூவை போட்டு, வதக்கி வேக வைக்கவும். சூடு ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவை மிக்க, 'வாழைப்பூ துவையல்' தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் நலனுக்கு உகந்தது. - கே.ரஹிமா, விழுப்புரம். தொடர்புக்கு: 98650 71700


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !