உள்ளூர் செய்திகள்

வேர்க்கடலை அவரை பொரியல்!

தேவையான பொருட்கள்:வேர்க்கடலை - 100 கிராம்அவரைக்காய் - 200 கிராம்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவுகடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகுத்துாள் - சிறிதளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாயை வதக்கவும். பின் தண்ணீர் சேர்த்து, நறுக்கிய அவரைக்காய், உப்பு போட்டு கிளறவும். நன்கு வெந்ததும், அவித்த வேர்க்கடலை, மிளகுத்துாள் சேர்க்கவும். சுவைமிக்க, 'வேர்க்கடலை அவரை பொரியல்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். சத்துகள் நிறைந்தது.- நர்மதா விஜயன், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !