உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு பயிற்சி!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1987ல், 8ம் வகுப்பு படித்த போது அறிவியல் ஆசிரியராக இருந்தார் சந்தான பாண்டியன். பாடங்களை நன்றாக கற்றுக்கொடுப்பார். நீச்சல் பயிற்சி நன்கு பெற்றிருந்தார். நீர் நிலைகளில் ஆடாமல் ஆசையாமல் நீண்ட நேரம் அவர் மிதப்பதை கண்டு வியந்திருக்கிறேன். மாணவ, மாணவியருக்கு மூச்சுப் பயிற்சி அளிப்பார். அதை ஆர்வம் மேலிட கற்றேன். நீண்ட நேரம் மூச்சு அடக்கும் பயிற்சி பெற்றிருந்ததால், எங்கள் பகுதியில் ஆழமுள்ள கிணறுகளில் மூழ்கி அடி மண் எடுத்து வருவேன். இதை பார்ப்போர் பாராட்டி ஊக்கமளிப்பர். தொடர்ந்து பெற்ற பயிற்சிகளால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றேன். மட்டை பந்தாட்டம், உருளைக்கிழங்கு பொறுக்குதல் போன்ற விளையாட்டு போட்டிகளில் முதன்மையாக வந்து தகுதி பெற்றுள்ளேன்.எனக்கு, 50 வயதாகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இதழ்களில் கட்டுரையும் எழுதி வருகிறேன். வாழ்வின் உயர்வுக்கு உரிய பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர் சந்தான பாண்டியனை வணங்குகிறேன்.- ஜெ.ரவிக்குமார், திருப்பூர்.தொடர்புக்கு: 93606 25935


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !