உள்ளூர் செய்திகள்

துன்பத்தில் சிரி!

செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது புலியூர் நாடு. மகிழ்ச்சி, நிம்மதியுடன் வாழ்ந்தனர் மக்கள்.வித்தியாசமான சிந்தனை உடையவர் அந்த நாட்டு மன்னர். அடிக்கடி போட்டிகள் அறிவித்து நடத்துவார். அதில் பங்கேற்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.அன்று ஒரு போட்டிக்கான அறிவிப்பு வந்தது.அதில்,'நான், இதுவரை பார்க்காத பழம் கொண்டு வருவோருக்கு பரிசு. அதை நான் கண்டிருந்தால், எடுத்து வந்தவர் வாயிலே திணித்து திருப்பி அனுப்புவேன்' என்ற நிபந்தனையை விதித்திருந்தார் மன்னர்.ஏராளமானோர் பங்கு பெற்றனர்.முதலில், திராட்சை எடுத்து வந்தார் ஒருவர். அதை ஏற்கனவே அறிந்திருந்ததால், வாயில் திணித்து அனுப்பினார் மன்னர்.அடுத்து, நாவல் பழம் எடுத்து வந்தார் ஒருவர். அதுவும் வாயில் திணிக்கப்பட்டது. வாழை, முந்திரி, கொய்யா பழம் எடுத்து வந்தவர்களுக்கும், இதுபோல் நிகழ்ந்தது.அடுத்து, ஆரஞ்சு பழம் எடுத்து வந்தார் ஒருவர். அதையும் வாயில் திணித்து அனுப்பினார் மன்னர். அது சற்று பெரியதாக இருந்ததால், வாய்க்குள் நுழையவில்லை. உதடு அறுந்து ரத்தம் வழிந்தது; எடுத்து வந்தவன் அந்த வலியிலும் சிரித்தான்.சற்று கோபத்தில், 'ஏன் சிரிக்கிறாய்...' என்று கேட்டார் மன்னர்.'வாசலில் அன்னாசி பழத்துடன் ஒருவன் நிற்கிறான். அவன் நிலையை எண்ணி சிரித்தேன்...' என்றான்.பட்டூஸ்... துன்பம் வரும் போது சிரித்து அதை கடக்க வேண்டும்.- ஜி.பாரதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !