மணத்தக்காளி கீரை சூப்!
தேவையான பொருட்கள்:மணத்தக்காளி கீரை - 1 கட்டுதக்காளி - 2காய்ந்த மிளகாய் - 4சின்ன வெங்காயம் - 7பூண்டு - 3 பல்சீரகத்துாள் - 2 தேக்கரண்டிபெருங்காய துாள், உளுந்தம் பருப்பு, கடுகு, - சிறிதளவுஉப்பு, தண்ணீர், நல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கடாயில், நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் பெருங்காயத்துாள், சீரகத்துாள், ஆய்ந்து சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சத்துமிக்க, 'மணத்தக்காளி கீரை சூப்' தயார். சுவை மிக்கது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்!- எம்.சித்ரா, மதுரை.