உள்ளூர் செய்திகள்

பசலைக் கீரை சூப்!

தேவையான பொருட்கள்:பசலைக் கீரை - 50 கிராம்பாசிப் பருப்பு - 50 கிராம்தக்காளி - 2 வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 6 பல்வெண்ணெய், எலுமிச்சை சாறு - சிறிதளவுமிளகுத்துாள், கொத்தமல்லி தழை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கடாயில் வெண்ணெய் உருகியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும். பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்க்கவும். நன்கு வதங்கியதும், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில், வேக வைத்த பாசி பருப்பு, உப்பு, மிளகுத்துாள் சேர்த்து, கொதித்ததும், நறுக்கிய மல்லி தழை, எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கவும்.சத்துமிக்க, 'பசலைக்கீரை சூப்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி குடிப்பர்.- என்.லதா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !