உள்ளூர் செய்திகள்

பனங்கிழங்கு பர்பி!

தேவையான பொருட்கள்:பனங்கிழங்கு - 6சர்க்கரை - 1 கப்ஏலக்காய், பிஸ்தா - சிறிதளவுநெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பனங்கிழங்கை வேக வைத்து, நார் நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். அதனுடன், ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் நெய் சூடானதும், பனங்கிழங்கு கலவையை கொட்டி வதக்கவும். பின், தண்ணீர், சர்க்கரை கலக்கவும். நன்றாக கொதித்து கெட்டியானதும் நெய் ஊற்றி இறக்கவும்.தட்டில் நெய் தடவி, கலவையை கொட்டவும். அதன் மேல், துருவிய பிஸ்தா பருப்பு துாவி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'பனங்கிழங்கு பர்பி!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.- செ.தமிழரசி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !