உள்ளூர் செய்திகள்

பிரம்ம புத்திராவின் கம்பீரம்!

இமயமலையின் அடிவாரத்தில், பிரம்மபுத்திரா நதி பிரம்மாண்டமாய் ஓடுவதை பார்க்க வேண்டுமா...அதற்கு, அசாம் மாநிலம், கவுஹாத்தியிலிருந்து, 107 கி.மீ., துாரத்தில் உள்ள, பாக்பூர் மலைக்குச் செல்ல வேண்டும். மலையின் சாய்வான பாதையில் ஏறினால், பிரம்மபுத்திராவின் பிரம்மாண்டத்தை ரசிக்கலாம்; வியக்கலாம்.பிரம்மபுத்திரா, 2,900 கி.மீ., துாரத்துக்கு ஓடுகிறது; மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கால், இரு கரையிலும் பெரும் சேதம் ஏற்படுத்தி, கங்கையில் கலக்கிறது. உலகின் நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. ஆசியா கண்டம் சீனா நாட்டில் திபேத் பகுதியில், உற்பத்தியாகி, இந்தியாவில் அசாம் மாநிலத்தில், ரத்த நாளங்கள் போல் சுற்றி ஓடுகிறது. இதன் பிரம்மாண்டத்தை காண கண்கோடி வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !