கென்யான் பள்ளத்தாக்கு!
உலகிலேயே, மிக ஆழமானது என கருதப்படுவது, கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு. அமெரிக்கா, அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது, 320 கி.மீ., நீளமும், ஒன்றரை கி.மீ., ஆழமும் உடையது. இதன் வழியாக கொலராடோ என்ற பெரிய நதி, 2,334 கி.மீ., துாரம் பாய்ந்து கலிபோர்னியா பகுதியில் கடலில் கலக்கிறது.பள்ளத்தாக்கின் முகட்டில் நின்று பார்த்தால், கொலராடோ நதி எளிதில் புலப்படாது. கண்ணை சுருக்கி, கூர்ந்து பார்த்தால், மெல்லிய வெள்ளி ரிப்பன் போல் தோன்றும். இத்தனைக்கும், அது, மிகவும் அகலம் உடைய நதி. பள்ளத்தாக்கில் ஆவேசமாக பாயும் நதியை பக்கத்திலிருந்து பார்ப்பது சுகமான அனுபவம்.அந்த நதியில், படகை செலுத்தும் துணிவு மிக்க வீரர்கள் உண்டு. பள்ளத்தாக்கின் எழிலையும், கொலராடோ நதியின் வேகத்தையும் காண, தினமும் சுற்றுலா பயணியர் திரள்கின்றனர்.உலகப் புகழ் பெற்ற கென்யான் பள்ளத்தாக்கு அமெரிக்காவுக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.