டிராம் போக்குவரத்து!
கோல்கட்டா என்றதும் நினைவுக்கு வருவது, டிராம் வண்டி போக்குவரத்து. அதுவே, அந்த நகரின் சின்னமாக விளங்குகிறது. ஆசியாவில் முதன்முறையாக, 1873ல், கோல்கட்டா டிராம்வேஸ் என்ற நிறுவனம் துவங்கியது. முதலில், குதிரைகளால் இழுத்து செல்லப்பட்டது டிராம் வண்டி. பின், நீராவி இன்ஜின் இழுத்தது. இது, 1902ல் மின்மயமானது. பின், 1960ல், 37 தடங்களில் இயக்கப்பட்டது. மின்சார ஓவர் நெட்லைன் வழியாக இயங்குவதால், 'டிராலிபோல்' என அழைப்பர். மோசமான பராமரிப்பு, பயணியர் வரத்து குறைவு போன்ற பிரச்னைகளால், டிராம் போக்குவரத்து குறைய துவங்கியது. தற்போது, இரண்டு வழிப் பாதையில் மட்டும் இயங்குகிறது. மேற்கு வங்க அரசு போக்குவரத்து கழகம், இதை நிர்வகிக்கிறது. பல சினிமா காட்சிகளில், டிராம் போக்குவரத்து இடம் பெற்றுள்ளது.குறைந்த வேகம், நெரிசல் போன்ற காரணங்களால் டிராமில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கோல்கட்டா எஸ்பிளனேட் பகுதியில், டிராம் போக்குவரத்தை விளக்கும் அருங்காட்சியகம் உள்ளது.- ராஜிராதா