உள்ளூர் செய்திகள்

செய்து பாருங்கள்! - பாய் மர படகு!

தேவையான பொருட்கள்: தீக்குச்சி 6, ஒரு துண்டு சார்ட் பேப்பர், மெல்லிய கார்ட்போர்டு ஒரு துண்டு, கத்தரி கோல், பசை மற்றும் பெயின்ட்செய்முறை:1) டின்டெட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் சுருள் போன்று கோடுவரைந்து கட்செய்து எடுக்கவும். இப்போது ஸ்பிரிங் போன்று தயாராகிவிடும்.2) சார்ட் பேப்பரில் படகுபோன்று படம் வரைந்து கட்செய்து எடுக்கவும்.3) மற்றொரு துண்டு சார்ட்பேப்பரில் படத்தில் உள்ளது போல் சிறுசிறுதுண்டு பாய் மரங்களை வரைந்து கட்செய்து எடுக்கவும்.4) படகின் அடிப்பகுதியிலுள்ள டாட்டட் லைனை ஒரு பக்கமாக மடக்கவும்.மடக்கிய பக்கம் தீக்குச்சியை வரிசையாக வைக்கவும்.5) ஒவ்வொரு தீக்குச்சியிலும் இரண்டு பாய் மர காகிதங்களை படத்தில் உள்ளது போல் ஒட்டவும்.6) படகின் அடியில் மையப்பகுதியில் நாம் செய்து வைத்திருக்கும் ஸ்பிரிங்கை படத்தில் உள்ளது போல் ஒட்டவும்.7) ஒரு செவ்வக வடிவ கார்ட்போர்ட் துண்டில் ஒருபக்க ஓரத்தை அலைபோன்று கட்செய்து, படகின் முன் பகுதியில் ஸ்பிரிங் தெரியாத அளவில் வைக்கவும். கார்ட் போரிட்டில் நீல நிற பெயின்ட் அடிக்கவும்.இப்போது படகை லேசாக அழுத்தி விட்டால், கடல் அலையில் படகு செல்வது போல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !