வெற்றிகளைக் குவித்த விக்டரி!
'டிராபால்கா' கடல் போரில் வெற்றி கண்ட நெல்சனின் விக்டரி என்ற கப்பல், 1765 மே மாதம் 7 ம் தேதி கடலில் மிதக்க விடப்பட்டது.நெல்சனின் கொடிக் கப்பலான விக்டரி, அந்தப் பெயரில் மிதக்க விடப் பட்ட மூன்றாவது போர்க் கப்பல் மிகப் பெரியது. நீரில்லாத கடல் துறையில் கட்டப்பட்டது. கட்டி முடித்தபின் துறையில் நீர் நிரப்பி மிதக்கவிடப்பட்டது. இதன் எடை 2162 டன்கள்; நீளம் 152 அடிகள்; அகலம் 52 அடிகள். கப்பலின் அமிழ் அளவு 21 அடிகள். இதைக் கட்டுவதற்கு 3 லட்சம் அடி ஓக் மரமும், பலகைளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதில் நூறு பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. 42 பவுண்டுகள் எடையுள்ள துப்பாக்கிகள் 30, 24 பவுண்ட் எடைத் துப்பாக்கிகள் 28, 12 பவுண்டு எடைத் துப்பாக்கிகள் முப்பது, 6 பவுண்ட் எடைத் துப்பாக்கிகள் பனிரெண்டும் இக்கப்பலில் பொருத்தப்பட்டு இருந்தன.இந்த விக்டரி போர்க் கப்பல் முதன் முதலில் செயல்பட்டது 1778ம் ஆண்டு ஜூலையில் 'பிரஸ்ட்' போரில். மூன்றாண்டுகளுக்குப் பின் பிரெஞ்சுக்காரர்களோடு கடல் போரில் ஈடுபட்டது.விக்டரி கப்பல் 1782ல் ஜிப்ரால்டர் முற்றுகையில் பங்கு கொண்டது. கேப் செயிண்ட் விண்ஸெண்ட் போரில் 1797ல் பிரிட்டனின் கொடிக்கப்பலாக விக்டரி விளங்கியது. இப்போரில் நெப்போலியனின் கப்பல் படையோடு பிரிட்டன் மோதியது. இத்தனை வெற்றிகளையும் கண்ட பிறகே விக்டரி நெல்சனின் கொடிக்கப்பலாகி 1803ல் புகழ் பெற்றது.நெப்போனியானிக் போர்களின் முடிவில் (1815ல்) அதன் பின் நீராவிக் கப்பல்களின் ஆதிக்கத்தினாலும் இந்த வெற்றிக்கன்னிக்கு வேலை இல்லாது போயிற்று. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, போர்ட்ஸ் மவுத்தில் முடங்கிக் கிடந்தது. இந்த (ஹல்) கப்பலின் உடல்பகுதி பழுதடையவே (1922-ல்) நீரற்ற கடல் துறையில் பழுதுபார்க்கப்பட்டு, காட்சிப் பொருளாக நிரந்தரமாக நிறுத்தப் பட்டது.