உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர் மலர்!

என் பெயர் மகராசி; வயது 60. ஆறாவது வரை படித்துள்ளேன். என் கணவரின் உதவியால், நன்றாக எழுதப் படிக்க தெரிந்து கொண்டேன். இதற்கு சிறுவர்மலர் இதழும் ஒரு காரணம். என் கணவர் தீவிர தினமலர் வாசகர்.என் பிள்ளைகளுக்கு சிறுவர்மலர் கதைகளையும், துணுக்குகளையும் சொல்லி கொடுத்துள்ளேன். இப்போது, அவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவர்மலர் இதழை படிக்க சொல்லி கொடுக்கின்றனர்.நான், என் கணவர், எங்கள் பிள்ளைகள் இப்போது பேரப் பிள்ளைகள் என, மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பமே சிறுவர்மலர் வாசகர்கள். இதை சொல்வதில் பெருமை அடைகிறேன்.ஒவ்வொரு தமிழர்களின் அடையாளம் தினமலர் - சிறுவர்மலர். எனவே எல்லாரும் அவசியம் படியுங்கள்!நன்றி!- பி.மகராசி, பெரம்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !