வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 63; சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். என் மகன் எட்டு வயதில் படிக்கத் துவங்கினான்; பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், 'என்ன சாப்பாடு' என்று கேட்க மாட்டான். 'சிறுவர்மலர் எங்கே...' என்று தேடி எடுத்து படிப்பான். பொழுதுபோக்க பல விஷயங்கள் சில இதழ்களில் இருந்தாலும், நான் விரும்பி படிப்பது சிறுவர்மலர் இதழைத்தான். இதுவரை படித்த புத்தகங்களை எல்லாம் என் பேர பிள்ளைகளுக்காக சேமித்து வைத்திருக்கிறேன். இதில், 'இளஸ்... மனஸ்...' பகுதி, வளரும் பிள்ளைகள், பயன்பெறத்தக்க நல்ல ஆலோசனைகளை தருகிறது. வாழ்க சிறுவர்மலர் இதழ்.- எஸ்.கலைச்செல்வி, புதுச்சேரி.