வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 69; துவக்கப்பள்ளி தலைமையாசியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுதுகிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன்.இதழைப் பிரித்ததும் முதலில், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியை தான் படிப்பேன். அதில் வரும் செய்திகள் மிகவும் சுவையாக உள்ளன. அடுத்ததாக நன்னெறிக் கதைகள் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்க்க கூடியதாக அமைந்துள்ளன.பிஞ்சுகளின் கை வண்ணத்தில் மிளிரும் ஓவியங்களை தாங்கி வரும், 'உங்கள் பக்கம்!' பகுதி குழந்தைகளின் ஓவியம் வரையும் திறனை ஊக்குவிப்பதாக உள்ளது. பொது அறிவு, புதிர், போட்டிகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன.சிறுவர்மலர் இதழ் மேன்மேலும் பொலிவு பெற வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.- எல்.நஞ்சன், ஊட்டி.