உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 41; பி.லிட்., வரை படித்துள்ளேன். வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால், படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தவித்து வந்தேன். நன்றாக யோசித்து, சிறிது நேரத்தை ஒதுக்க தீர்மானித்தேன். தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் கணவர், தினமலர் நாளிதழின் தீவிர ரசிகர். என்னை ஊக்குவித்து, 'அறிவியல் செய்தி முதல், சிந்தனையை துாண்டும் அம்சங்கள் சிறுவர்மலர் இதழில் உள்ளன...' என பரிந்துரைத்தார்.சிறுவர்மலர் இதழ் எல்லா வயதினருக்கும் உகந்த அறிவுமலர் என்பது படித்ததும் தான் புரிந்தது. தெளிவான அச்சு எழுத்துக்கள், 'பளிச்'சென தெரிகிறது.பள்ளி கால சம்பவங்களை நினைவு கூறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, மிக சுவாரசியம் தருகிறது. ஆச்சரியத்தை அள்ளித்தரும் அறிவுச்சுடர், 'அதிமேதாவி அங்குராசு!' கட்டுரைகள் மனதில் ஆழமாக பதிகின்றன.சமையலில் புதுமை படைக்கும் பகுதியாக, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' உள்ளது. குழந்தைகள் கைவண்ணத்தில், 'உங்கள் பக்கம்!' பகுதி மிளிர்கிறது. சிந்தனையை தெளிய வைக்கும், 'புதிர் போட்டி!' குதுாகலம் தருகிறது. வாழ்வை வளமாக்க அறிவுரைக்கிறது, 'இளஸ்... மனஸ்...' பகுதி. ஒவ்வொரு பகுதியையும் ஆர்வமாக குடும்பத்தில் அனைவரும் படித்து மகிழ்கிறோம். அறிவுப்பசிக்கு தீனியாக உள்ள சிறுவர்மலர் இதழ் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்!- த.சண்முகப்பிரியா, திருப்பூர்.தொடர்புக்கு: 91508 44411


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !