உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 70; ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கிறேன். ஒரு ஆண்டுக்கு முன், வயது மூப்பு காரணமாக, உடல் நிலை சரியின்றி மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தேன்.தனிமை வாட்டியது. அப்போது, பக்கத்து வீட்டு சிறுமி, சிறுவர்மலர் இதழை படிக்க தந்தாள். அதை வாசித்த போது முதுமை, தனிமையை விரட்டி மகிழ்ச்சியை தந்தது. சிறுகதைகளில், நீதி போதனையை சொல்லி கொடுப்பது மட்டுமின்றி, ஓவியம் வரைவதற்கு ஊக்கம் அளித்து, ஊக்கத்தொகை அளிப்பதை சிறப்பான செயலாக கருதுகிறேன்.நம் அந்தரங்க விஷயங்களை, சிறுவர்மலர் இதழ் தவிர யாரிடமும் கூற முடியாது; அதற்கு, 'இளஸ்... மனஸ்...' பகுதியில் தீர்வு கிடைக்கிறது. பிஞ்சுகளின் கைவண்ணத்தில், மிளிரும் ஓவியங்களை தாங்கி வரும், 'உங்கள் பக்கம்!' பகுதி, குழந்தைகளுக்கு ஓவியம் வரையும் திறனை ஊக்குவிக்கிறது. சலிப்பு தெரியாமல், எல்லா வயதினரையும் கவர்கிறது. அறிவூட்டுவதில் சிறந்து விளங்கும் சிறுவர்மலர் இதழ் பணி தொடர வாழ்த்துகிறேன்.- நாச்சிமுத்து, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !