உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 48; தனியார் கல்லுாரியில் ஆய்வக உதவியாளராக பணி புரிகிறேன். சிறுவர்மலர் இதழை படிப்பதற்காக எப்போதும் ஆவலாய் காத்திருப்பேன். சிறுமியாக இருந்தபோது, தங்கையுடன் போட்டி போடுவேன். பேப்பர் போடுபவர் வரும் வழியில் காத்திருந்து, ஓடிச் சென்று, சிறுவர்மலர் இதழை வாங்கி படித்த காலம் இனிமையானது. அப்போது வெளிவந்த, 'சத்யவான் சாவித்ரி!' படக்கதை இன்றும் மனதில் உள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் என் மனக்கண் முன் நிற்கின்றன. அதே விறுவிறுப்புடன், படிப்பினை தரும் கதைகளை இன்றும் படித்து வியக்கிறேன்.மாணவப் பருவத்தை நினைவுபடுத்துகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. ஆரோக்கிய பதார்த்தங்கள் செய்வது பற்றிய, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி பயனுடையதாக உள்ளது.விடுமுறையில் வீட்டுக்கு வரும் உறவினர் குழந்தைகளுக்கு, பழைய சிறுவர்மலர் இதழ்களை தந்து படிக்க துாண்டுவேன்; வாய்விட்டு படிப்பதால் வாசிப்பு திறன் மேம்படுகிறது. மொபைல் விளையாட்டுக்கு தடைபோடுகிறது. சிறியோருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது, சிறுவர்மலர் இதழ்.- ரா.சாந்தி, விருதுநகர்.தொடர்புக்கு: 73396 72503


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !