உள்ளூர் செய்திகள்

வீ டு லவ் சிறுவர் மலர்!

படத்தில் இருக்கும் அருமை தம்பதியரின் பெயர் வைகுண்டம், 87. சகுந்தலா வைகுண்டம், 86. தினமலர் - சிறுவர்மலர் இதழின், 12 வருட வாசகர்கள். இவர்கள் மகன் கணேஷ் தன் பெற்றோரை பற்றி இவ்வாறு கூறினார். 'வெள்ளிக்கிழமை ஆனாலே காபி, டீ குடிக்கிறாங்களோ இல்லையோ, சிறுவர்மலர் இதழில் வெளியாகும் அனைத்து பகுதிகளையும், கட்டுரை, கதை, ஜோக்ஸ் என வரிவிடாமல் படித்து முடித்துவிட்டுதான் வேறு வேலையே பார்ப்பர் என் பெற்றோர்.'அம்மாவுக்கு கண்ணாடியே தேவை இல்லை. அவ்வளவு சூப்பரான கண் பார்வை. சகோதரிகள் உண்டு. நாங்கள் அனைவருமே யார் முதலில் சிறுவர்மலர் இதழை படிப்பது என்று போட்டி போடுவோம். எதுக்குடா வம்பு என்று வெள்ளிக்கிழமைகளில் இரண்டு தினமலர் பத்திரிகை வாங்கி விடுவேன். பெற்றோரது புகைப்படம் சிறுவர்மலர் இதழில் வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி' என்றார்.இவர்கள் பல்லாண்டு வாழ சிறுவர்மலர் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !