வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 80; தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 20 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். ஆரம்பத்தில், சிறுவர்மலர் இதழ், சிறுவர்களுக்கானது என எண்ணி தவிர்த்து வந்தேன். ஒருநாள் வாசித்த போது அருமையான தகவல்கள் இருப்பதை கண்டேன். பள்ளிக்காலத்தில் பெற்ற அனுபவங்கள், சிறுகதைகள், படக்கதை, சிரிப்பு துணுக்குகள் என, அனைத்தும் சுவைக்கும்படி இருந்தன! இதனால், தொடர்ந்து படித்து வருகிறேன். என் பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரையும் படிக்க அறிவுறுத்தியுள்ளேன். அனைவரும் நிரந்தர வாசகராகி விட்டனர். சிறந்த கல்விப் பணி செய்யும் சிறுவர்மலர் இதழ் சிறக்க வாழ்த்துகிறேன்!- வெ.ஜெயராமன், விருதுநகர்.தொடர்புக்கு: 94429 56277