உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 63. கதர் கிராமத் தொழில் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளேன். 'தினமலர்' நாளிதழை, 35 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். உள்ளது உள்ளபடி காட்டும் நிலை கண்ணாடி போன்று உள்ளன, செய்திகள். வாசகர் கடிதங்களுக்கு உரிய மதிப்பு தருகிறது. காலை எழுந்ததும், தலைப்பு செய்தியை படித்தால் தான், மகிழ்ச்சி அடைவேன். பிறகு தான், வாசல் சுத்தம் செய்து, கோலம் போடுவேன். சனிக்கிழமைகளில் இணைப்பிதழான சிறுவர்மலர், கவர்ந்துள்ளது. அதில் புள்ளிகளை இணைத்து, படத்தை முழுமை ஆக்குவது, வித்தியாசம் கண்டுபிடிப்பது எல்லாம் மிகவும் விருப்பமாக செய்வேன். நகைச்சுவையை வழங்கும், 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள், படக்கதை, மழலையர் பக்கம், குட்டி குட்டி மலர்கள் பகுதிகளை என் பேரன்களுக்கு காண்பித்து, ஊக்குவித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழின் அர்த்தமுள்ள பயணம் தொடர வாழ்த்துகள். - டி.உமா மகேஸ்வரி, கோவை. தொடர்புக்கு: 76048 32974


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !