வீ டூ லவ் சிறுவர்மலர்!
எ ன் வயது, 80; இல்லத்தரசியாக இருக்கிறேன். தினமலர் நாளிதழ் மற்றும் அதன் இணைப்பிதழ்களை தவறாமல் படித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழ் பெரியவர்களையும் காந்தம் போல் கவர்கிறது. அனைத்து பகுதிகளும் அருமையாக உள்ளன. ஒன்றையும் விடாமல், 'அட்டை டூ அட்டை' படித்து விடுகிறேன். நான் மட்டுமல்ல குடும்பத்தில் அனைவரும் சிறுவர்மலர் இதழுக்கு ரசிகர்களாக உள்ளோம். என் துணைவரின் சகோதரர், தனக்கு பேரன் பிறந்ததும், 'அவன் வளர்ந்ததும் படிப்பான்...' என்று கூறி சிறுவர்மலர் இதழை சேகரித்து, 'பைண்ட்' செய்து வைத்திருந்தார். பேரன் வளர்ந்த பின் அதை கொடுத்தார். அந்த விபரங்கள், ஏப்., 8, 1994 சிறுவர்மலர் இதழில் வெளியானது. இன்றும் அதை எண்ணி பெருமைப்படுகிறேன். சிறுவர்களுக்கு தேவையானவற்றை தரும் அரிய பொக்கிஷமாக திகழும் சிறுவர்மலர் இதழ் மென்மேலும் சிறந்து வளர, இறைவனை நெஞ்சார வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன். - எஸ்.சிவகாமி, சென்னை.