என்ன நல்லா பாத்துக்கோங்க!
* அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும், வெளிச்சம் மிகவும் குறைந்த இடத்திலும், 'டிவி' பார்க்க கூடாது. அறையிலுள்ள விளக்கு, 40 அல்லது 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்க கூடாது* சுவற்றை ஒட்டியயடி, 'டிவி'யை வைக்க கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான், செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும்* தூசி படியாமல் இருப்பதற்காக துணித்திரை போட்டு மூடி வைத்தால், 'டிவி' இயங்கும் போது அதை முழுவதுமாக மூடாமல், சூடு தணிவதற்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுத்து அதன் பின், மூட வேண்டும்* 'ஆன்' செய்த நிலையில், 'டிவி'யை நகர்த்த கூடாது* குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில், 'டிவி'யை வைக்க வேண்டும். அதே போல் வீட்டு நபர்களை தவிர வெளியாட்கள் கண்டபடி, 'டிவி'யை இயக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்* எப்போதும், 'டிவி' பார்க்கும் போது, 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்கு பாதுகாப்பானது* 'டிவி'யின் பிரதான பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும்; 'டிவி'யும் அடிக்கடி பழுதாகாது.