ISO என்பதன் விளக்கம் என்ன?
வல்லரசு நாடுகளும், வளரும் நாடுகளும் தரம் மிக்க பரிமாற்றங்களுக்காக அமைக்கப்பட்ட உலகத்தர நிர்ணய அமைப்பு தான் ISO எனப்படுகிற International standard organization விஞ்ஞானம், தொழில், உற்பத்தி, வினியோகம் போன்றவற்றிற்கு ஒரே கூரையின் கீழ் குறிப்பிட்ட நிர்ணய விதிகளின்படி தரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ISO வின் பணியாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இக்கழகம், 1946ல் ஆரம்பிக்கப்பட்டது.நமது சென்னை விமான நிலையம் ISO 2001 என்ற தர நிர்ணயச் சான்றிதழ் பெற்றது. BIS என்பது இந்தியாவின் தர நிர்ணயக் கழகத்தின் பெயராகும்.