ஒருவர் விடும்போது...
பள்ளியில் படிக்கும் போது நடந்த வேடிக்கை விநோத நிகழ்ச்சி இது. 'சிரிப்பூட்டும் வாயு என்றால் என்ன...' என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.சிரிப்பூட்டும் வாயு என்பது, நைட்ரஸ் ஆக்சைடு. இதை முகரும் போது, நரம்புகள் கிளர்ச்சியடைந்து, சிரிப்பை உண்டாக்குவதால், இதற்கு சிரிப்பூட்டும் வாயு என பெயர். இதன் விடை இது தான்.ஆனால், என் நண்பனோ, 'சிரிப்பூட்டும் வாயு என்பது, கார்பன் டை ஆக்சைடு. இதை, எல்லா மனிதர்களும் உண்டு பண்ணுவர். ஒருவர் விடும் போது, மற்றவர் அதை பார்த்து, சிரிப்பர். எனவே, இதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயர்!' என எழுதியிருந்தான்.இதை வகுப்பறையில் ஆசிரியர் வாசிக்க, 'சிரிப்பூட்டும் வாயு அறை முழுக்க பரவி, வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது. 'லாஜிக்'கா இது சரியில்லை என்றாலும், 'மேஜிக்'கா இப்படி கதையெல்லாம் விட கூடாது. உள்ளதை உள்ளபடி எழுதணும்' என அறிவுரை கூறினார் ஆசிரியர்.- நடராஜன், மதுரை.ஹலோ... இது உங்களுக்கே ஓவரா தெரியல!- பொறுப்பாசிரியர்