புலியை பார்த்து சூடு போட்ட பூனை!
அமெரிக்கர்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உண்டு. அது, ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களைப் போல் தாங்களும் தோற்றமளிக்க வேண்டும் என, நினைப்பது தான்!அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மனைவியும், முன்னாள் மாடல் அழகியுமான, 47 வயது, மெலனியா தான், அமெரிக்க பெண்களின் தற்போதைய, 'ரோல் மாடல்!'திருமணமாகி, இரு குழந்தைகளுக்கு தாயான, கிளாடியோ சியோரா என்ற, 42 வயது பெண், மெலனியாவைப் போல் தானும் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, மார்பு, உதடு மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில், எட்டு அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.இருந்தாலும், 'மெலனியாவின் தோற்றத்துக்கும், சியோராவின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை...' என, பலரும் கூறுவதால், சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.சியோரா, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் என்பது, கூடுதல் தகவல்.— ஜோல்னாபையன்.