குண்டான பெண்மணிக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு!
கோர்ட் அறைக்குள் நுழைய முடியாதபடி குண்டாக இருந்ததால், ஒரு பெண்ணின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.பிரிட்டன் நாட்டில், தெற்கு லண்டன் பகுதியில் தொரன்டன் ஹீத் பகுதியில் வசிப்பவர் பீவர்லி டக்ளஸ்; வயது 43. அரசு பஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றிய போது, பல லட்சம் பவுண்ட் அளவிற்கு மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டின் பேரில், கோர்ட்டில் ஆஜராக இவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.மாடியில் அமைந்திருந்த கோர்ட் அறைக்கு செல்ல குறுகலான படிக்கட்டுகள் மட்டுமே இருந்தது. அந்த படிகளில் ஏறி வர முடியாத அளவு, இந்த பெண், மிகவும் குண்டாக இருந்தார். அவரது நிலைமையை நீதிபதி ரோகர் சப்பலிடம், வக்கீல்கள் எடுத்து கூறினர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கும், அந்த பெண் நுழையும் அளவுக்கு கீழ் தளத்தில் உள்ள வேறு கோர்ட்டில் நடக்கும் என்றும் அறிவித்தார்.— ஜோல்னா பையன்.