சமையல் பாத்திரங்களுக்காக ஒரு அருங்காட்சியகம்!
குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரில் உள்ள, 'வேச்சார்' என்ற அருங்காட்சியகத்தில், பல நுாற்றாண்டுகள் பழமையான சமையல் பாத்திரங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மற்ற சாமான்களை பாதுகாத்து வருகின்றனர். இது, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது. முகலாயர் ஆட்சிக் காலத்தில், யுத்தத்துக்கு போகும் சிப்பாய்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அவர்கள் செல்லும் ஊர்களில் உணவு தயாரிக்க, பெரிய அண்டா, குண்டா போன்றவற்றை எடுத்து செல்வதுண்டு. இந்த பாத்திரங்கள் தான், இங்கு காட்சி பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.— ஜோல்னாபையன்