உள்ளூர் செய்திகள்

கடலுக்கு அடியில் ஒரு அருங்காட்சியம்

மெக்சிக்கோ நாட்டில், கேன்குன் என்ற இடத்தில், கடலுக்கு அடியில், ஒரு அருங்காட்சியகத்தைக் கட்டியுள்ளனர். மெக்சிகன் கேரிபீன் கடலில், தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று, நானூறுக்கும் மேற்பட்ட பலவிதமான சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். 9 அடி முதல், 20 அடி உயரம் வரை, பல அளவுகளில், இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்த எடை, 120 டன்னுக்கும் மேல். இவ்விடத்தை, அமைதி பூங்கா என்று அழைக்கின்றனர்.இயற்கையை பாதிக்காத வண்ணம், பிரத்யேகமாக, பல்லாண்டுகள் நீடித்து இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, இந்த சிற்பங்களை வடித்துள்ளனர். இதை ரசிக்க, பல நாடுகளிலிருந்து மக்கள் வருகின்றனர். இந்த அருங்காட்சியத்தைப் பார்க்க, முதலில் நீண்ட நேரம் வேகப் படகில் பயணிக்க வேண்டும். பின், கடலுக்கு அடியில் நீந்த வேண்டும். இந்த அருங்காட்சியகம், 1600 சதுர அடிபரப்பளவில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !