உள்ளூர் செய்திகள்

நீச்சல் உடையில் சிகிச்சை அளித்த நர்ஸ்!

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் அருகில் உள்ள, துலா என்ற நகரில், அரசு மருத்துவனையில் நர்சாக பணியாற்றி வந்தார், 20 வயது இளம் பெண். இவர் செய்த அட்டூழியம், இப்போது உலகம் முழுவதும் சிரிப்பாக சிரிக்கிறது. இந்த இளம் பெண்ணுக்கு, 'கொரோனா' நோயாளிகள் வார்டில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, டாக்டர்கள், நர்சுகளுக்கு, பாதுகாப்பு கவச உடை கொடுக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவில், வெயில் வாட்டி வதைப்பதால், கவச உடை அணிந்து பணியாற்றுவது, நர்ஸ், டாக்டர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது.துலா மருத்துவமனையில் பணியாற்றிய நர்ஸ் என்ன செய்தார் தெரியுமா... 'டூ பீஸ்' எனப்படும், நீச்சல் உடை மட்டும் அணிந்து, அதற்கு மேல், உடல் பாகங்கள் தெரியும் வகையில், பிளாஸ்டிக்காலான கவச உடையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், இதை புகைப்படம் எடுத்து, சமூக வலைளத்தில் பதிவிட்டதால், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். வெயிலுக்கு பயந்து, நீச்சல் உடையில் சிகிச்சை அளித்து, வேலையை பறிகொடுத்த நர்சின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட, ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !