உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை!

உண்மையும்..... பேருண்மையும்...!* அடுப்பங்கரையும்பள்ளியறையுமேஅகிலமாயிருந்ததுபாட்டிமார் காலத்தில்!* அடுப்பு, படுக்கையோடுஅருகிலிருந்த பள்ளிக்கும்செல்ல முடிந்ததுஅம்மாக்கள் காலத்தில்!* கல்லூரிகளில் படித்துஅறிவைப் பெருக்கிஅலுவலகப் பணியும்சாத்தியமாயிற்றுஅக்காமார் காலத்தில்!* நாகரிகத்தின் மாற்றங்கள்நவீன உடைகள்அலைபேசி, காதல் எனசுதந்திரம் கிடைத்ததுதங்கைமார் காலத்தில்!* அலைபேசியால் அளவான பேச்சுமுகமறியாதவரோடு, 'சாட்டிங்'என்பது சுதந்திரத்தின் உச்சம்...தானியங்கி வாகனங்களைதானே இயக்குகின்றனர்பேத்திமார் இக்காலத்தில்!* தலைமுறைக்கு தலைமுறைபெண்ணினம் முன்னேறிபடிப்பு, பணி, பணம் எனவளம் பெருகியது உண்மை...பாட்டி, அம்மாக்கள் காலத்திலிருந்தஅன்பு, பண்பு, நேசம்சுருங்கிப் போனதென்பதும்பேருண்மைதான்!— எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !