உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை!

புறங்கூற்று* குற்றம் சொல்லவும்குறைகள் பேசவும்முற்றம் தேவையில்லைஇவர்களுக்கு!* வென்றவனைக் கண்டால்அதிர்ஷ்டம் என்றுஅலட்டிக் கொள்வர்!* தோற்றவனை கண்டால்தேவை தானா என்றுஎகத்தாளம் பேசுவர்!* உள்ளவனைக் கண்டால் கொள்ளை அடித்த பணமென்றுகுற்றம் சொல்வர்!* இல்லாதவனைக் கண்டால்பிழைக்க தெரியாதவனென்றுஇகழ்ந்து பேசுவர்!* தப்பு செய்தவன்தண்டனை பெற்றால்சட்டம் சரியில்லை என்பர்!* தப்பு செய்யாதவன்தண்டனை பெற்றால்சரியான நீதி என்பர்!* பிழைப்பு தேடிபிற நாடு சென்றால்பேராசை பிடித்தவன்என்று பிதற்றுவர்!* உழைப்பு தேடிஉள்நாட்டில் உலவினால்ஊர் சுற்றியென்றுஉதாசினம் செய்வர்!* ஊருக்கு உதவினால்ஊர்கழுதை என்றுபட்டம் சூட்டுவர்!* சும்மா சுற்றினால்சோம்பேறி என்றுமுத்திரை குத்துவர்!* மற்றவர் குறைகளைமணிக்கணக்கில் பேசும்இவர்களுக்குஒரு நிமிஷம் கூடகிடைப்பதில்லைதம் குறைகளைநினைத்துப் பார்க்க!— க.அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !