உள்ளூர் செய்திகள்

தனி இடம் பிடித்த, ரேபான் குளிர் கண்ணாடி!

இன்று ஏகப்பட்ட வகை குளிர் கண்ணாடிகள் கிடைத்தாலும், 'ரேபான்' மற்றும் 'ஓக்லி' பிராண்டு குளிர் கண்ணாடிகளுக்கு தனி மவுசு இருக்கிறது.உலகில் பல பிரபலங்கள், இந்த பிராண்ட் குளிர் கண்ணாடிகளை அணிவதை பெருமையாக கருதுகின்றனர்.'ரேபான்' வகை குளிர் கண்ணாடியை தயாரித்தவர், இத்தாலி நாட்டை சேர்ந்த, லியானார்டோ டெல் வெக்கியோ. சிறு வயதில், வறுமையில் வாடியவர், இரண்டாம் உலகப் போரின்போது, அனாதை விடுதி ஒன்றில் தஞ்சமடைந்தார். அங்கேயே தங்கி படித்த பின், வேலை தேடி அலைந்தார்.வேலை கிடைக்காமல், மூக்கு கண்ணாடி தொழிலில் இறங்கினார். பல சிரமங்களை சந்தித்து, உலக புகழ்பெற்ற, 'ரேபான்' குளிர் கண்ணாடியை அறிமுகப்படுத்தி, புகழின் உச்சிக்கு சென்றார்.இத்தாலியிலுள்ள செல்வந்தர்களுள், இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர், சமீபத்தில், தன், 87 வது வயதில் மரணம் அடைந்தார். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !