அழிவின் விளிம்பில் உலக அதிசயம்!
உலக அதிசயங்களில் ஒன்று, சீனாவில் உள்ள பெருஞ்சுவர். அன்னிய படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, அப்போதைய சீன ஆட்சியாளர்களால், 8ம் நுாற்றாண்டில் இந்த சுவர் கட்டப்பட்டது.உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சுவரில், தற்போது, 30 சதவீதம், மணல் புயலால் கடுமையாக சேதமடைந்து விட்டது. ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில், இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.இதுவரை, இந்த சுவரின் பாதுகாப்புக்காக சிறப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத சீன அரசு, அவசரம் அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. - ஜோல்னாபையன்.