திருவனந்தபுரத்தில் அடுக்குமாடி கார் பார்க்கிங்!
இன்று நகரங்களில்,'கார் பார்க்கிங்' பிரச்னை, பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில், இப்பிரச்னையை சமாளிக்க, திருவனந்தபுரத்தில், 'அடுக்குமாடி பார்க்கிங்' வசதி செய்துள்ளனர். பல தளங்களைக் கொண்ட இந்த அடுக்குமாடி பார்க்கிங்கில், ஒரு தட்டில் காரை ஏற்றி, 'பொத்தானை' அழுத்தினால், கார் மேலே சென்று விடும். இப்படி, ஆறு கார்களை, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, 'பார்க்கிங்' செய்யும் வசதி, திருவனந்தபுரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் வெற்றி பெறுமானால், கேரளாவில், எல்லா நகரங்களிலும், இது போன்ற, 'பார்க்கிங்' வசதி செய்யப்பட இருக்கிறது.— ஜோல்னா பையன்.