அடேங்கப்பா!
அரசியல் தலைவர்களும், மனித உரிமை கழகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், கேரள சிறைகளில், 16 பேர் தூக்கு கயிறுக்காக காத்திருக்கின்றனர். இவர்களை தூக்கிலிட யாரும் முன்வரவில்லை; காரணம், கூலிக்குறைவு.உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிகமானோரை தூக்கிலிட்டு புகழ்பெற்றார் ஜோசப் மால்ட்டா என்ற முன்னாள் ராணுவ வீரர். இரண்டாவது உலக போரின் போது ஹிட்லரின் நெருங்கிய அதிகாரிகள், 11 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத்தனை பேரை ஒன்றாக தூக்கிலிட யாரும் முன் வரவில்லை. பல முறை பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் யாரும் வரவில்லை. அப்போது தான் நாஜிக்களால் மிகவும் சித்ரவதைக்குள்ளான ஜோசப் மால்ட்டா, 'ரெடி' என்றார். கடந்த, அக்., 17, 1946ல் நியூரம்பர்க் மற்றும் லான்ஸ்பர்க் சிறைச்சாலையில், காலை, 5:00 மணியில் இருந்து, 6:00 மணி வரை, ஒருவர் பின் ஒருவராக, 10 பேரை எமலோகத்துக்கு அனுப்பினார். ஒருவர் மட்டும் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.— ஜோல்னாபையன்