உள்ளூர் செய்திகள்

ஆப்பிரிக்காவின், ஸ்டைல் மன்னன்!

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் வசிக்கும், ஜேம்ஸ் ம்வாங்கி என்பவரை, தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரை, 'ஆப்பிரிக்காவின் ஸ்டைல் மன்னன்' என, அழைக்கின்றனர். கண்கள் கூசும் அளவுக்கு, பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களில், 'கோட், சூட்' அணிந்து, அதற்கேற்ற, 'ஷூ, டை' மற்றும் மொபைல் போனுடன், நைரோபி நகரில் உள்ள தெருக்களில் வலம் வருவது தான், இவரது வேலை. இதுபோன்ற நிறங்களில், 300க்கும் அதிகமான, 'கோட், சூட்'கள் இவரிடம் உள்ளனவாம். இப்போது, 'கொரோனா' காலம் என்பதால், முக கவசத்தையும், வித்தியாசமான நிறங்களில் அணிந்து அசத்துகிறார். இவரது உடை அலங்காரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட, பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களுக்கு விளம்பர பிரதிநிதியாக நியமித்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !